மொபட் மோதி மூதாட்டி பலி

மொபட் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2023-03-06 19:50 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வெண்ண முத்துப்பட்டியை சேர்ந்தவர் அருமை அம்மாள் (வயது 70). இவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வெண்ணமுத்துப்பட்டியில் உள்ள அக்காள் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் இவர் தாலுகா அலுவலகம் செல்ல திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, எழில் நகரை சேர்ந்த சுகந்தி (35) என்பவர் ஓட்டி வந்த மொபட் அருமை அம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்