தெருநாய்கள் கடித்து மூதாட்டி சாவு

தெரு நாய்கள் கடித்து குதறியதில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update:2023-08-08 01:30 IST

சாணார்பட்டி அருகே உள்ள புகையிலைபட்டியை சேர்ந்தவர் அற்புதம். அவருடைய மனைவி சந்திரா (வயது 70). நேற்று முன்தினம் இவர், அருகில் உள்ள தனது தோட்டத்துக்கு நடந்து சென்றார்.

அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் சந்திரா மீது பாய்ந்து அவரை கடித்து குதறின. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை விரட்டினர்.

பின்னர் காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் சந்திரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்