கிணற்றில் மூதாட்டி பிணம்

கிணற்றில் மூதாட்டி பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-05-21 20:31 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் மேல ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த இருளப்பன் மனைவி பார்வதி (வயது 63). இவர் வீட்டில் இருந்து வயலுக்கு சென்று ஆடுகளுக்கு தீவனம் பறித்து வருவதாக கூறி சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை. பின்னர் இருளப்பன் வயலில் சென்று தேடிய போது அங்குள்ள கிணற்றில் பார்வதி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் வடக்கு போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்