மூதாட்டி தீயில் கருகி சாவு

மூதாட்டி தீயில் கருகி சாவு

Update: 2023-02-17 18:45 GMT

துடியலூர்

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள மீனாட்சி நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி தனம்மாள் (வயது 75). இவர் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார். தனம்மாளை அவரது மகள் ஜெயசித்ரா என்பவர் கவனித்து வந்தார்.

மூதாட்டிக்கு கொசு கடிக்காமல் இருக்க அவரது படுக்கைக்கு அருகில் கொசு வர்த்தியை கொளுத்தி வைப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு ெஜயசித்ரா தனது தாயின் படுக்கைக்கு அருகே கொசு வர்த்தியை பற்ற வைத்து விட்டு சென்றார். நள்ளிரவு தனம்மாள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார்.

அப்போது கொசு வர்த்தி சுருள் படுக்கையின் மீது விழுந்தது. கண்இமைக்கும் நேரத்தில் படுக்கையில் தீ பிடித்து படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி மீதும் தீ பரவியது. இதில் உடல் கருகிய மூதாட்டி தனம்மாள் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அவரது மகள் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்