பழைய இரும்பு வியாபாரி திடீர் சாவு
தூத்துக்குடியில் பழைய இரும்பு வியாபாரி திடீரென இறந்தார்.
தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 66). இவர் மில்லர்புரம் பகுதியில் துரை என்பவருடன் சேர்ந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் ஜோசப், காப்பர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பலரிடம் இருந்து மொத்தம் ரூ.8 லட்சம் கடன் வாங்கினாராம். ஆனால் தொழிலில் லாபம் கிடைக்கவில்லை. கடும் நஷ்டம் ஏற்பட்டதால் ஜோசப் மனஉளைச்சலில் இருந்தாராம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் எட்டயபுரம் ரோட்டில் உள்ள துரையின் குடோனில் அமர்ந்து இருந்த போது, திடீரென ஜோசப்புக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.