பழைய குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும்

பழைய குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-08-10 00:15 GMT


கோவை


கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அரங்கில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி கூறியதாவது:-


ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும். மாநகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதால் விபத்தினால் ஏற்படும் உயிரழப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் குற்ற வழக்கில் இருந்து விடுதலையாகி வந்துள்ள பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.

மாநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை அறவே இல்லாத ஒழிக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து கூடுதல் போலீசாரை அங்கு பணியமர்த்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட வில்லை என்றால், அந்த பகுதியில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை கமிஷனர் சண்முகம் உள்பட உதவி கமிஷனர்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்