விஷம் குடித்த வயதான தம்பதி கணவர் சாவு; மனைவிக்கு சிகிச்சை
விஷம் குடித்த வயதான தம்பதி
கவுந்தப்பாடி அருகே வயதான தம்பதி விஷம் குடித்தனர். இதில் கணவர் இறந்தார். மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விவசாயி சாவு
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தயிர்பாளையம் பெரியகாட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72). விவசாயி. அவரது மனைவி கமலம் (68). இவர்களுடைய மகன் வெங்கடேஷ். இவர் திருமணமாகி சித்தோடு பகுதியில் வசித்து வருகிறார்.
ராமசாமியும், கமலமும் பெரியகாட்டு்வலவு பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ராமசாமி நேற்று காலை விஷம் குடித்த நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார்.
தற்கொலை
ராமசாமி அருகே கமலம் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரும், மனைவியும் விஷம் குடித்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.