ஓலப்பாளையம் மதுரை வீரன் கோவில் திருவிழா
ஓலப்பாளையம் மதுரை வீரன் கோவில் திருவிழா நடைபெற்றது.
வேட்டமங்கலம் ஊராட்சி ஓலப்பாளையத்தில் உள்ள மதுரை வீரன் ேகாவில் உள்ளது. இக்கோவிலில் கருப்பண்ணசாமி, கன்னிமார் சாமி ஆகிய தெய்வங்களும் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தனர். இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.கிடா வெட்டு பூஜையும், மதியம் அசைவ பூஜையும் நடந்தது. இரவு சுவாமிகளுக்கு பால், பழம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இரவு வாணவேடிக்கையும், மதுரை வீரன் எனும் சமூக நாடகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.