ஒக்கரைப்பட்டிகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆண்டிப்பட்டி அருகே ஒக்கரைப்பட்டியில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-04-10 18:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே ஒக்கரைப்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து யாகசாலையில் இருந்து குடம் புறப்பாடாகி கோவில் கோபுர விமானத்தில் 108 புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானத்தில் 4 கருடன்கள் வட்டமிட்டன. இதனை பார்த்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர் காளியம்மனுக்கு பால், பழம், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, தங்க நகைகள் சாத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்