பரோலில் சென்ற கைதி தலைமறைவு: சிறை அலுவலக உதவியாளர்களிடம் விசாரணை

பரோலில் சென்ற கைதி தலைமறைவானது தொடர்பாக சிறை அலுவலக உதவியாளர்களிடம் கோவை மண்டல சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் விசாரணை நடத்தினார்.

Update: 2022-07-05 22:16 GMT

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 44).ஆயுள் தண்டனை கைதியான இவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 3 நாள் பரோல் பெற்று சென்றவர் அதன்பிறகு சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகினார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தலைமறைவான கைதி ஹரிகிருஷ்ணன், சிறை வார்டன் ராமகிருஷ்ணன் என்பவரது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து வார்டன் ராமகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கைதிகளுக்கு பரோல் வழங்கும் பணியில் ஈடுபடும் சிறை அலுவலர் சங்கர்பாலுவிடம் கோவை மண்டல சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிறை அலுவலக உதவியாளர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்