திருமதி தமிழ்நாடு அழகி பட்டம் வென்ற கோவை பெண்...!

கொச்சியில் திருணமான பெண்களுக்கான திருமதி தென்இந்திய அழகிப்போட்டி நடைபெற்றது.

Update: 2023-01-20 03:04 GMT

கோவை,

கேரள மாநிலம் கொச்சியில் பேகாசஸ் குளோபல் நிறுவனம் சார்பில் திருணமான பெண்களுக்கான திருமதி தென்இந்திய அழகிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு தென் இந்திய மாநிலங்களில் இருந்து பல்வேறு திருமணமான பெண்கள் கலந்துகொண்டனர்.

அவர்களில் இறுதிச்சுற்றுக்கு 14 போட்டியாளர்கள் தேர்வானார்கள். அதில் கோவை சரவணம்பட்டி அருகே விசுவாச புரத்தை சேர்ந்த ஷாலு ராஜ் (வயது 30) என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நடந்த திருமதி தென் இந்திய அழகி போட்டியில் ஷாலு ராஜ் 2-வது இடத்தையும், திருமதி தமிழ்நாடு அழகி போட்டியில் முதலிடம் பிடித்து திருமதி தமிழ்நாடு அழகி பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார்.

மேலும் அவர் பன்முக ஆளுமை திறன் கொண்டதற்காக திருமதி நல்ல உடல் கட்டமைப்பு, திருமதி திறமைசாலி, திருமதி நம்பிக்கைக்குாியவர் ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவருக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது.

இது குறித்து ஷாலு ராஜ் கூறும்போது, சொந்தமாக காபி ஷாப் நடத்தி வருகிறேன். எனது காபி ஷாப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை பணியாளராக நியமித்து அவர்களின் வாழ்விற்கு வழிவகுத்து வருகிறேன். எனது கணவர் ராஜ்சிவானந்தம். எனக்கு 4 வயதில் ஆரின் ஆதியா என்ற மகன் உள்ளான். திருமணமான பெண்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்காமல் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் திருமதி அழகிப்போட்டியில் பங்கேற்றேன். அதில் வெற்றி பெற்று சாதித்து உள்ளேன். எனது குடும்பத்தினர் மிகவும் ஒத்துழைப்பு வழங்கினா் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்