தக்கலையில்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் வைத்திருந்த 12 கடைகளுக்கு அபராதம்

தக்கலையில்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் வைத்திருந்த 12 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.;

Update: 2023-05-25 18:02 GMT

தக்கலை:

பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் லெனின் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் முத்துராமலிங்கம் தலைமையில் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தக்கலையில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா என்று திடீர் சோதனை நடத்தினர். 25 கடைகள், இரண்டு அரசு மதுபான பார், ஒரு தனியார் பார் ஆகியவற்றில் சோதனையிட்டதில் 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை வைத்திருந்த 12கடைகளுக்கு ரூ.6 ஆயிரத்து 700 அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்