கோவில்பட்டி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

கோவில்பட்டி கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-12-16 18:45 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை சார்பில் கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளியை சுற்றி 100 அடி எல்லைக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பீடி, சிகரெட் போன்றவை விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தும் பணி நேற்று நடந்தது. பள்ளியில் இருந்து 100 அடி வரை புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி என்று எல்லை கல் நட்டப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் டாக்டர் வேணுகாதேவி தலைமையில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சுடலைமணி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லையா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினார்கள். பள்ளியில் இருந்து 100 அடி எல்லைக்குள் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள், பீடி, சிகரெட் விற்பனை செய்யக்கூடாது என்றும், இதை மீறி விற்பனை செய்தால் அவற்றை பறிமுதல் செய்வதுடன், அபராதம் விதிக்கப்பட்டு, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்