மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள மீன்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட், மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தன. அதன்போில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அதிகாரி செல்வராஜ், மீன்வள உதவி இயக்குனர் ராஜேந்திரன், உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன், அபுதாகிர் மற்றும் அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் உழவர் சந்தை மீன் மார்க்கெட், கிருஷ்ணன் கோவில் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது ெகட்டுப்போன 26 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் கெட்டுப்போன மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.