ஆலங்குடி வாரச்சந்தை,கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
ஆலங்குடி வாரச்சந்தை,கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுரையின்படி ஆலங்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் ஆலங்குடி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையில், தூய்மை பணியாளர்கள் வாரச்சந்தை மற்றும் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது மீன் கடைகள், காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் பொருட்களுக்கு மஞ்சப்பை பயன்ப டுத்தாமல் பிளாஸ்டி பைகளை பயன்படுத்தியதாக 13 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து ரூ.5,800 அபராதம் விதிக்கப்பட்டது.