பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் முடிவு

சின்னசேலம் அருகே வி.மாமாந்தூரில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் முடிவு வகுப்புகளை தனியார் பள்ளியில் நடத்த திட்டம்

Update: 2022-09-14 17:24 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அருகே வி.மாமாந்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3 மாணவிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் ஊரக வளர்ச்சி முகமையின் மாவட்ட திட்ட இயக்குனர் மணி தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று பழுதடைந்த பள்ளி கட்டிடத்தின் உறுதி தன்மையைப் பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 3 வகுப்பறைகளை கொண்ட கட்டிடம், 2 வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் என 2 பழமையான கட்டிடங்களையும் இடித்து அகற்ற முடிவு எடுத்தனர். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்காத நிலையில் மாற்று ஏற்பாடாக அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்புகளை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்த ஆய்வின்போது சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, செல்லதுரை மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்