செஞ்சி பட்டாசு கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
செஞ்சி பட்டாசு கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனா்.;
செஞ்சி:
ஓசூர் மற்றும் அரியலூர் ஆகிய இடங்களில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் பலியானார்கள். பட்டாசு ஆலை மற்றும் பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செஞ்சியில் உள்ள பட்டாசு கடைகளில் தாசில்தார் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசு கடைகள் வைக்க உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா?, அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.
மேலும் அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடிய நாட்டு வெடிகளை விற்க கூடாது, பட்டாசு கடைகளில் தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம், தனிப்பிரிவு காவலர் முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.