புளியஞ்சோலையை மேம்படுத்த அதிகாரி ஆய்வு

புளியஞ்சோலையை மேம்படுத்த அதிகாரி ஆய்வு செய்தனர்.;

Update: 2023-04-02 22:18 GMT

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தது. அதன் அடிவாரப்பகுதி திருச்சி மாவட்டத்தை சேர்ந்தது. இந்நிலையில் எல்லை சம்பந்தமான இணக்கமின்மை, அலுவலக பணிகள் தொய்வு தொடர்பாக சமூக ஆர்வலர்களிடையே புகார் எழுந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் துணை வன பாதுகாவலர் அல்லிராஜ், வனச்சரக அலுவலர் பெருமாள், பி.மேட்டூர் பிரிவு வனவர் பிரியங்கா, புளியஞ்சோலை பகுதி வனக்காப்பாளர் மணிகண்டன் மற்றும் வன அலுவலர்கள் புளியஞ்சோலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புளியஞ்சோலை காப்பு காட்டுப்பகுதியில் வன சோதனை சாவடி, பெண்களுக்கான உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் கட்டிடங்களுக்கான இடம் தேர்வு, நாட்டாமடு பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க முதலுதவி வசதிகள், மிதவைகள், கண்காணிப்பு பணிகளை மேம்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 10 நாட்களாக புளியஞ்சோலை பகுதியில் பொதுமக்கள் குளிப்பது, காப்பு காட்டுப்பகுதிகளில் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்