மக்களை தேடி மருத்துவம் குறித்து அதிகாரி ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மக்களை தேடி மருத்துவம் குறித்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-06-01 19:15 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் மக்களை தேடி மருத்துவம் குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார். அப்போது மக்களை தேடி மருத்துவம் குறித்த செயல்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மம்சாபுரம் பகுதியில் இதுவரை 450 பேர் மட்டும் உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்களைத் தேடி மருத்துவத்தில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களை கண்டறிந்து இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற வைக்கவேண்டும், சிகிச்சை எடுத்து இடையிலேயே சிகிச்சையை நிறுத்தியவர்களையும் கண்டறிந்து சிகிச்சையை தொடர செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் இணை இயக்குனர் கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது மம்சாபுரம் பேரூராட்சி உறுப்பினர் தங்கமாங்கனி, டாக்டர் சபரீஸ் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்