புதிய கட்டிடம் கட்டும் இடத்தை அதிகாரி ஆய்வு

ஆற்காட்டில் புதிய கட்டிடம் கட்டும் இடத்தை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2023-02-01 18:29 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் எதிரே நகராட்சிக்கு சொந்தமான ஏ.ஜி.ஆர். பில்டிங், காந்தி பில்டிங், மாங்காய் மண்டி ஆகிய வணிக வளாகங்கள் உள்ளன. இதில் உள்ள கடைகள் பாழடைந்துள்ளதால் அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தை நகராட்சிகளின் நிர்வாக துணை இயக்குனர் உமா மகேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பி.பென்ஸ் பாண்டியன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்