காயல்குடி ஆற்றின் தடுப்பணையில் அதிகாரி ஆய்வு
காயல்குடி ஆற்றின் தடுப்பணையில் அதிகாரி ஆய்வு செய்தார்.
தாயில்பட்டி,
தொடர்மழை காரணமாக காயல்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெம்பக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கங்கர் சேவல் அருகில் உள்ள தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சென்ற முறை தடுப்பணை உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறியது. மீண்டும் தடுப்பணை சேதம் அடையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன் தடுப்பணையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தடுப்பணையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.