பட்டாசு ஆலையில் அதிகாரி ஆய்வு

பட்டாசு ஆலையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-09-30 19:10 GMT

சாத்தூர், 

சாத்தூர் அருகே சந்தையூரில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலைக்கு தற்காலிக தடைக்கான ஆணை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு பணி நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் ராமஜெயம், மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணிக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பட்டாசு ஆலையின் உட்புறம் பணி நடைபெறுவதும், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதில் பணி முழுமை அடையாத பட்டாசுகள் நிரப்பப்பட்ட 4 அட்டை பெட்டிகள் இருந்தது. இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராமஜெயம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்