அலுவலர்கள் வேலை நிறுத்தம்; வெறிச்சோடிய யூனியன் அலுவலகம்
அலுவலர்கள் வேலை நிறுத்தம் காரணமாக யூனியன் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
தொண்டி,
திருவாடானை யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தை முடக்கும் வகையில் அனைத்து நிலை ஊழியர்களையும் ஒரே நேரத்தில் பணிமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்தும், அந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் ஒட்டுமொத்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று யூனியன் அலுவலகம் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டது.