இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

நெல்லையப்பர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-12-24 22:02 GMT

நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைமை செயற்பொறியாளர் ரகுநாதன், தலைமை பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அறநிலையத்துறை கோவில்களில் நடைபெறும் திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது திருப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இதில் அதிகாரிகள் நெல்லை கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி அன்புமணி, சங்கரன்கோவில் ரத்தினவேல் பாண்டியன், கவிதா, சங்கர், தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்