அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தினார்.

Update: 2022-10-15 18:45 GMT

சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்னை- கன்னியாகுமரி சிறப்பு திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.பின்னர் மாதிரிமங்கலம், முடிகண்டநல்லூர் இணைப்பு சாலை, சீர்காழி- திருமுல்லைவாசல் சாலை பணி, கதிராமங்கலம் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணிக்கு அரசுக்கு சொந்தமாக உள்ள வருவாய்த் துறையைச் சார்ந்த இடம், இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த இடம் கையகப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட பணிகள் குறித்தும், முன்னேற்றம் குறித்தும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தங்களின் துறைகளில் சாலை பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

அப்போது சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் முருகண்ணன், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலைத்துறை, ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்