நகர நில அளவையாளர் பணியிடை நீக்கம்
கூத்தாநல்லூரில் நகர நில அளவையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கூத்தாநல்லூரில் நகர நில அளவையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நகர நில அளவையாளர்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது40). இவர் கூத்தாநல்லூர் நகர நிலவரி திட்ட நில அளவையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கூத்தாநல்லூர் பகுதிக்கு சட்டமன்ற மனுக்கள் குழுவினர் வருகை தந்து ஆய்வு செய்தனர்.
அப்போது ராஜமாணிக்கம் மேற்கொண்ட நகர நில அளவைகளில் குறைபாடுகள் இருப்பதாக சட்டமன்ற மனுக்கள் குழுவினர் கண்டறிந்தனர்.
பணியிடை நீக்கம்
இதுகுறித்து ராஜமாணிக்கத்திடம் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் விவரம் கேட்டறிய முற்பட்ட போது, குழுவினர் முன்பு ராஜமாணிக்கம் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் நகர நில அளவைகளில் குறைபாடுகள் இருப்பதாக கூறி, திருவாரூர் மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் உதவி இயக்குனர் தேவராஜன் நேற்று ராஜமாணிக்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.