வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு

நத்தப்பள்ளம் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2022-06-17 16:12 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் நத்தப்பள்ளம் ஊராட்சியில நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர், ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணியையும், பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் நடைபெறும் புதிய வீடு கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது கட்டிட பணிகளை விரைவாக, தரமாகவும் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ஆதிரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ராஜூ பொறியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்