'தினத்தந்தி' செய்தி எதிரொலி; மலைக்கிராமத்தில் அதிகாரி ஆய்வு

பெரும்பாறை அருகே ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மலைக்கிராமத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2023-04-01 20:45 GMT

பெரும்பாறை அருகே பாச்சலூர் ஊராட்சி கடைசிக்காடு கிராமத்தில் வசிக்கிற மலைக்கிராம மக்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிக்காக ஏங்கி தவிக்கிறார்கள் என்று 'தினத்தந்தி'யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கலெக்டர் விசாகன் உத்தரவுப்படி கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயசந்திரிகா கடைசிக்காடு கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடைசிக்காடு கிராமத்தில் 48 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு புதிதாக 28 வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து தரைமட்ட தொட்டி கட்டி குடிநீர் வினியோகம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரை இயற்கையான நீரூற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆய்வின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், பணி மேற்பார்வையாளர் திருமுருகன், ஊராட்சி செயலர் ரகு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்