வேளாண் விரிவாக்க மையத்தில் அதிகாரி ஆய்வு
பரங்கிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணையா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், வேளாண்மை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு இயக்க (பயிறு) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தெளிப்பான் வழங்கினார், இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் நந்தினி, வேளாண்மை அலுவலர் தீப தர்ஷினி, துணை வேளாண்மை அலுவலர் சிவசங்கரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மச்சேந்திரன் மற்றும் தமிழரசி உள்பட பலர் உடன் இருந்தனர்.