கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தைகொடுக்கம்பாறை பஞ்சாயத்து துணைத்தலைவர், உறுப்பினர்கள் முற்றுகை

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கொடுக்கம்பாறை பஞ்சாயத்து துணைத்தலைவர், உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;

Update: 2023-03-31 18:45 GMT

கோவில்பட்டி:

கொடுக்கம்பாறை பஞ்சாயத்து துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி அருகிலுள்ள கொடுக்கம்பாறை பஞ்சாயத்து துணை தலைவர் ஞானபாண்டி தலைமையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் எஸ். கே. சாமி முத்துப்பாண்டி, ரேணுகா, பூமாரி மற்றும் கிராம மக்கள் கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கொடுக்கம்பாறை பஞ்சாயத்தில் தலைவர் ஒத்துழைப்போடு ஒப்பந்ததாரர் வாறுகால், சாலை வசதி மற்றும் சுடுகாடு பணிகளை தரம் குறைந்ததாக செய்து வருகிறார். இதை ஆய்வு செய்ய நாங்கள் ெசன்றோம். அப்போது அவர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவதூறாக பேசினர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மேற்படி ஒப்பந்ததாரருக்கு எந்த பணிகளும் செய்ய அனுமதிக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனாலும் அதையும் மீறி அவருக்கு பஞ்சாயத்து தலைவர் வேலை கொடுத்து வருகிறார். பஞ்சாயத்து நிதியை மோசடி செய்து, வருவாய் இழப்பு செய்து வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் பஞ்சாயத்து தலைவர், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் துணைசூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்