கிராம நிர்வாக அலுவலகம் இடிப்பு

பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்காக கிராம நிர்வாக அலுவலகம் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2023-04-05 18:45 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் நேற்று பொக்லைன் மூலம் இடிக்கப்பட்டது. மேலும் சாலை விரிவாக்க பணிகள் விரைவில் நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்