தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் செந்தில்ராஜ்

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-28 18:45 GMT

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விருது

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாளுபவர்களுக்கு சுற்றுலா விருதுகள், கடந்த ஆண்டு முதல் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுகள் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் மாதம் 27-ந் தேதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலாவுக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம் சுற்றுலா ஊக்குவிப்புக்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாதலம், பல்வேறு பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் அமைப்பாளர், சிறந்த கூட்ட சுற்றுலா அமைப்பாளர், சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி போன்ற விருதுகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்www.tntourismawards.com என்ற இணையத்தளத்தின் மூலம் 15.8.2023- க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை 0461-2341010, 7397715690 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் tothoothukudi@gmail.com என்ற இமெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்