ஒடுகத்தூர் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு சாம்பியன் பட்டம்
மாநில அளவிலான தடகள போட்டியில் ஒடுகத்தூர் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவில் தனியார் பள்ளி குழந்தைகளுக்கான தடகள போட்டி நடந்தது. இதில் பல்வேறு தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஒடுகத்தூர் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டங்களை வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாராட்டினர்.