ஓட்டப்பிடாரம் பகுதியில் நடந்தமக்கள் குறைதீர்க்கும் முகாமில்சண்முகையா எம்.எல்.ஏ. பங்கேற்றார்

ஓட்டப்பிடாரம் பகுதியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சண்முகையா எம்.எல்.ஏ. பங்கேற்றார்

Update: 2023-10-18 18:45 GMT

ஓட்டப்பிடராம்:

ஓட்டப்பிடாரம் அருகே சிலோன்காலனி, கவர்னகிரி, அகிலாண்டபுரம், வடக்கு ஆவாரங்காடு ஆகிய கிராமங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சாலை, தெரு விளக்கு, குடிநீர், வடிகால் பள்ளி கட்டிடம் சீர் அமைப்பு, இலவச பட்டா உள்ளிட்ட கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எம்.எல்.ஏ உறுதியளித்தார். தொடர்ந்து மேல் முறையீடு செய்யும் பெண்களுக்கு, உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

தொடர்ந்து சிலோன்காலனியில் 25 விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் உரம், மருந்து தெளிப்பான் மற்றும் தார்ப்பாய்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் எம்.எல்.ஏ வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் வட்டார சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் கிரி, பஞ்சாயத்து தலைவர்கள் கமலாதேவி யோகராஜ், முனியசாமி, அருண்குமார், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்