நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-09 20:54 GMT

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர்களை தரக்குறைவாக பேசிய சுகாதார அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகம் முழுவதும் மகப்பேறு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி நெல்லை அரசு ஆஸ்பத்தியில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மகப்பேறு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் டாக்டர் முகமது ரபிக் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் டாக்டர் சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்