கல்லணையில் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

கல்லணையில் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்

Update: 2022-08-24 20:30 GMT

தஞ்சை நீர்வள ஆதாரத்துறை காவிரி வடிநிலக்கோட்ட கண்காணிப்பு பொறியாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற முருகேசன் நேற்று மாலை கல்லணையில் ஆய்வு மேற்கொண்டார். கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அணையில் உள்ள ஷட்டர்களை ஏற்றி இறக்கி ஆய்வு செய்த அவர் டெல்டா பாசனத்திற்கு நீர் பங்கீடு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் ஏற்பட்டால் அதனை சமாளிக்க போதுமான அளவிற்கு சவுக்கு மரங்கள், மணல் போன்றவற்றை இருப்பு வைக்கவும், ஆறுகளில் சுற்றுலா பயணிகள் இறங்காமல் இருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், கல்லணை உதவி பொறியாளர் திருமாறன், உதவி பொறியாளர்கள் அன்பு செல்வன், அரவிந்த், நிஷாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.









Tags:    

மேலும் செய்திகள்