கல்லறை திருநாள் அனுசரிப்பு

கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-11-02 20:21 GMT

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்‍கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திருச்சி மேலப்புதூர், பொன்மலைப்பட்டி அருகே கொட்டப்பட்டு, புத்தூர், சென்னை பை-பாஸ்சாலை, சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள சங்கரன் பிள்ளை ரோட்டில் உள்ள அமலாதாமஸ் கல்லறை தோட்டம் போன்ற பல்வேறு பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், கிறிஸ்தவர்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். சிலர் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கினர். ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல் கல்லக்குடி, புள்ளம்பாடி, வடுகர்பேட்டை, கோவாண்டாகுறிச்சி, ஆலம்பாக்கம், விராகலூர், கல்லகம், சிலுவைப்பட்டி மற்றும் லால்குடி, துறையூர், மணப்பாறை, தொட்டியம் உள்பட மாவட்டம் முழுவதும் கல்லறை திருநாள் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்