கம்பத்தில் கல்லறை திருநாள் அனுசரிப்பு
கம்பத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கிறிஸ்தவர்களால் கல்லறை திருநாள், சகல ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று கல்லறை தினநாள் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி கம்பம் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள், கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி வைத்தனர். பின்னர் கல்லறை தோட்டத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில், கம்பம் பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ் கலந்துகொண்டு, இறந்தவர்களை நினைவுகூர்ந்து திருப்பலி, பிரார்த்தனை செய்தார். அதன்பிறகு புனிதநீரால் கல்லறைகளை ஜெபித்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.