தீ தொண்டு வாரம் அனுசரிப்பு

அரக்கோணத்தில் தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-04-14 18:36 GMT

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் ஒரு வாரம் தீ தொண்டு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி அரக்கோணம் தீயணைப்பு துறையினர் சார்பில் சிறப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் வீரர்கள் தீ தொண்டு நாள் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ்அசோக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தீயணைப்பு கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது நிலைய அலுவலர் விஜயகுமார் விபத்தில் காயமடைந்தோருக்கு முதலுதவி, வெள்ளத்தில் இழுத்துச் செல்வோரை காப்பாற்றுவது, அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, சமையல் எரிவாயு கசிந்து தீப்பற்றினால் தற்காப்பு உள்பட பல வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீ விபத்துக்கள் ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்