ஓ.பி.சி. உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ்

ஓ.பி.சி. உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-08-02 11:24 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிகவும் தாமதம் என்றாலும், இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும். எந்த அளவுக்கு விரைவாக உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தான் பின்தங்கிய நிலையில் உள்ள சாதிகளுக்கு சமூகநீதி கிடைக்கும். இந்த உண்மையை மத்திய அரசு உணர்ந்து கொண்டு, தற்போது மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்