கருவேலமரங்களை அகற்ற வேண்டும்

கருவேலமரங்களை அகற்ற வேண்டும்

Update: 2022-08-27 20:12 GMT

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் அருகே நரசிங்கபுரம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியின் சுற்றுச்சுவரை சுற்றி கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் வகுப்பறைகளை மறைத்துள்ளன. மேலும் மழை காலங்களில் விஷ பூச்சிகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவரை சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்