தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள்

தரங்கம்பாடி முதல் நண்டலாறு சோதனை சாவடி வரை தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-04 18:45 GMT

பொறையாறு:


தரங்கம்பாடி முதல் நண்டலாறு சோதனை சாவடி வரை தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன

சென்னையில் இருந்து சிதம்பரம், சீர்காழி, திருக்கடையூர், தரங்கம்பாடி, காரைக்கால், நாகூர், நாகைக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை தரங்கம்பாடியிலிருந்து காரைக்கால் செல்லும் தேசிய நெடுஞ்சாலை காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் எல்லையான பொறையாறு, நண்டலாறு சோதனை சாவடியை கடந்து சென்னையில் இருந்து காரைக்கால், திருநள்ளாறு நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடியில் இருந்து ராஜூபுரம் பொறையாறு நண்டலாறு சோதனை சாவடி வரை இருபுறமும் கருவேல முட்செடிகள் தற்போது மரமாக வளர்ந்து காட்சியளிக்கிறது. மின் கம்பங்களையும் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது கருவேலமரங்கள் வாகன ஓட்டிகளை தாக்குகின்றன.

அகற்ற வேண்டும்

இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் பயணிகளையும், வாகன ஓட்டிகளையும் கருவேல முட்செடிகள் கை, கண் உடம்பில் கிழித்து காயப்படுத் துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரங்கம்பாடி முதல் பொறையாறு நண்டலாறு சோதனை சாவடி பகுதியில் இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்