ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடையநல்லூர்:
அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி பாண்டியன் தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர செயலாளர் இசக்கி துரை வரவேற்று பேசினார். மாவட்ட அவை தலைவர் பரமசிவம், மாவட்ட இணை செயலாளர் செல்வி முத்தையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் நகர, ஒன்றிய, பேரூா் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.