ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர் தேசபந்துதிடலில் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. பால கங்காதரன், தெய்வம், எஸ். எஸ். கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஓ.பி.எஸ். அணி அமைப்பு செயலாளர்கள் முருகையா பாண்டியன், லயன் மாரிமுத்து, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் காளிமுத்து, சந்தோஷ் குமார், மாவட்ட நிர்வாகிகள் ஜெயக்கொடி, முன்னாள் யூனியன் துணைத் தலைவர் மூக்கையா, தொழிற்சங்க செயலாளர் ஆறுமுகம், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை விருதுநகர் நகர செயலாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.