ஓ.பன்னீர்செல்வம் அணி- அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கொடநாடு வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-01 18:45 GMT

கொடநாடு கொலை- கொள்ளை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி உண்மை குற்றவாளியை நாட்டு மக்களுக்கு அடையாளம் காண்பிக்க வேண்டி தி.மு.க. அரசை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அ.ம.மு.க. கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர் செஞ்சி சேவல் ஏழுமலை தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், குமரன், மாநில அமைப்பு செயலாளர் கணபதி, தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் செஞ்சி கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வன், நகர செயலாளர்கள் கமருதீன், தம்பி ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் வேலு, தனுசு, மாவட்ட பேரவை செயலாளர் பாலமணிகண்டன், அ.ம.மு.க. மாவட்ட அவைத் தலைவர் மெடிக்கல்ராஜ், நகர செயலாளர் சக்திவேல் முருகன், ஒன்றிய செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்