ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.;

Update:2022-08-17 23:34 IST

கடந்த மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் ஆகியவை செல்லாது என நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, அரியலூர் பஸ் நிலையம் மற்றும் தேரடி அருகே அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அரியலூர் நகர ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்