ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கோவில்பட்டி:
கடந்த ஜூலை 11-ந் தேதி நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை கேள்விப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு கணேஷ் பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்க திரண்டனர். போலீசார் பட்டாசு வெடிக்க வேண்டாம், இனிப்பு வழங்குங்கள் என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.