கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஓ.பன்னீர்செல்வம்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Update: 2022-07-24 07:49 GMT

சென்னை,

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து 15-ந்தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஒரு வாரத்திற்கு மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டார்.

இதையடுத்து இன்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 9 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார். ஓ.பன்னீர் செல்வத்தை இன்னும் 2 நாட்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்