கேவையில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்

கேவையில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டது.

Update: 2022-07-02 17:23 GMT


அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் உள்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாறிமாறி போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. பெயரில், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாகவும், அவரை கட்சியை தலைமை ஏற்க வருமாறும் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் அ.தி.மு.க.வின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படத்துடன் கோவை அ.தி.மு.க. கிளை கழக தொண்டர்கள் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தன.

இதேபோல போத்தனூர் பகுதியில் "சின்னம்மா தலைமை ஏற்போம்" என்று சசிகலா புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவையில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்