'எடப்பாடி பழனிசாமியுடன் அமர்ந்து பேச தயாராக உள்ளேன்' - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவே அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-16 15:41 GMT

சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது,

* ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுந்தது ஏன் என்று எனக்கே தெரியவில்லை

* எந்த அதிகார ஆசையும் எனக்கு இல்லை.

* ஒற்றை தலைமை வேண்டும் என்ற புதிய பிரச்சினையை உருவாக்கியவர் அதிமுக நிர்வாகி மூர்த்தி

* என்னையும், தொண்டர்களையும் பிரிக்க முடியாது

* எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை தேவையா?

* நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றை தலைமை குறித்து பேசியது இல்லை.

* பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவிற்கு கொடுத்த பதவியில் வேறு யாரும் வரக்கூடாது

* அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு பொதுக்குழுவில் வைக்க வேண்டும் என்ற மரபுக்காகவே கூட்டம் நடத்தினோம்

* பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை

* அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை

* ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என முடிவு செய்திருந்தோம்

* மீண்டும் ஒற்றை தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்

* எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன்

* இருவரும் இணைந்தபோது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை

* "தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன்"

* 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு ஈபிஎஸ் உடன்பட வேண்டும்

* சசிகலா விவகாரத்தில் தலைமை நிர்வாகிகளே முடிவு செய்வார்கள்

* தொண்டர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கக் கூடாது என்பது எனது நோக்கம்

* "ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்"

*ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது

* அதிமுகவே அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி

* அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவது அதிமுக மட்டுமே' என்றார்.

மேலும் படிக்க... அ.தி.மு.க ஒற்றை தலைமை விவகாரம் :பாயும் பழனிசாமி; பதுங்கும் பன்னீர்செல்வம் ; தொண்டர்கள் எதிர்பார்ப்பு...!

Tags:    

மேலும் செய்திகள்